மைசூருவில் அமைய இருக்கும் சினிமா நகருக்கு அம்பரீஷ் பெயர்: முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

பெங்களூரு: மைசூருவில் அமைய இருக்கும் சினிமா நகரத்திற்கு அம்பரீஷ் பெயர் சூட்டப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.

கன்னட  சினிமா நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் சில தினங்களுக்கு முன் இறந்தார். அவருக்கு அஞ்சலி  செலுத்தும் வகையில் பெங்களூருவில் நினைவு கூட்டம் பெங்களூருவில் நடந்தது.  இதில் முதல்வர்  குமாரசாமி பேசுகையில், ‘‘மைசூருவில் அமைய இருக்கும் அரசு  சினிமா நகரத்திற்கு நடிகர் ‘‘அம்பரீஷ் சினிமா நகரம்’’ என்றே பெயர்  சூட்டப்படும். அதுபோல் ராம்நகரில் சினிமா பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.  ராம்நகர் சினிமா பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ராஜ்குமார் பெயர்  வைக்கப்படும்’’ என அறிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: