ஆட்டிறைச்சியை, நாய் இறைச்சி என வதந்தி பரப்பியவர் மீது கடும் நடவடிக்கை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது சென்னையில் நேற்று அளித்த பேட்டி: புயல் பாதித்த மாவட்டத்தை உடனடியாக பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பிரதமர் இன்று வரை புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை. உடனடியாக அவர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் 1.25 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின சமுதாயத்தின் பொருளாதாரத்தை முடக்க சதி செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத்தான், ராஜஸ்தானில் இருந்து ரயிலில் வந்த ஆட்டிறைச்சியை எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் திட்டமிட்டு நாய் இறைச்சி என்று அறிவிக்கப்பட்டது. பொய் பிரசாரம் செய்தது. இதனால், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது மாநில துணை தலைவர் அப்துர் ரகுமான், துணை பொதுச்செயலாளர் அப்துல்ரஹீம், மாநில செயலாளர் அப்துல் கறீம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: