ஸ்ரீவைகுண்டம் அணையில் வணிக ரீதியாக ஆலைகள் தண்ணீர் எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை

புதுடெல்லி: ஸ்ரீவைகுண்டம் அணையில் வணிக ரீதியாக ஆலைகள் தண்ணீர் எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் ஆலைகள், வணிக ரிதியாக நீர் எடுப்பதாக குற்றம்சாடி திமுகவைச் சேர்ந்த ஜோயல் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அணையில் இருந்து தண்ணீர் எடுப்பதில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிகள் மீறப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்து. கடந்த மாதம் 3ம் தேதி இவ்வழக்கு மீது விசாரணை நடைபெற்றது.

அப்போது இதுகுறித்து அனைத்து தரப்பினரும் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை நவம்பர் 28ம்(நேற்று) தேதி நடைபெறம் எனவும் பசுமை தீர்ப்பாயம் கூறியது. அதனடிப்படையில் நேற்று இவ்வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கின் உத்தரவு தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்தவொரு ஆலையும் வணிக நோக்கத்துடன் தண்ணீர் எடுக்கக்கூடாது. மாறாக அந்த ஆலை அமைந்துள்ள இடத்தில் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கட்டடங்கள் இருக்கும்பட்சத்தில் குடிநீர் தேவைக்காக நீர் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: