விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க மக்கள் கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படாததால் அந்த பகுதி மக்கள் மாற்று பாதை இன்றி அவதி அடைந்து வருகின்றனர். விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த பாதை இரண்டு ஆண்டுகளுக்கு ரயில்வே நிர்வாகம் முடியாது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் சுரங்கப்பாதை பணி நிறைவடையாததால் மாற்று பாதை இன்றி அந்த பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் 5 கிலோமீட்டர் சுற்றி செல்லும் மக்கள் அருகில் சேரும் சகதியுமாக காணப்படும் வயல்வெளிகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டப்படாத சுரங்க பாதையில் செல்லும் மக்கள் விபத்துகளை எதிர்கொள்வதாக கூறுகின்றனர். வாகனங்களும் அந்த வழியாக செல்லும் போது பழுதாகும் நிலை ஏற்படுகிறது என்று கூறுகின்றனர் பொது மக்கள். மேலும் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு கடினமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஒருசிலர் பணி முடியாமல் பாதியிலேயே தோண்டப்பட்ட சுரங்கத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் மழை பெய்து சுரங்கத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த பாதையையும் மக்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: