துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : 4 வீரர்கள் உயிரிழப்பு

அங்காரா : துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்தான்புல்லில் உள்ள சமந்திரா விமானத் தளத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, 5 பேருடன் புறப்பட்டது. இதனையடுத்து சங்கத்தீப் என்ற இடத்தில் குடியிருப்புகளின் மீது பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகளின் இடையே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

இதையடுத்து விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை ஆய்வு செய்தனர். படுகாயமடைந்த ராணுவ வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிஷ்டவசமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில், இது ஐந்தாவது ஹெலிகாப்டர் விபத்து என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் விபத்தால் துருக்கியில் இதுவரை 27 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: