6 மாதத்துக்கு பணம் வேண்டாம் ... எதிர்கட்சிகளுக்கு ஜெட்லி பதில்

புதுடெல்லி: ‘மத்திய நிதி அமைச்சகத்துக்கு அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து நிதியே வேண்டாம் என்று நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி கூறியுள்ளார். சமீபத்தில் ரிசரவ் வங்கியிடம் 9.63 லட்சம் கோடி ரூபாய் உபரியாக இருப்பதாகவும், அதில்  கணிசமாக மத்திய அரசு திட்டங்களுக்கு ஒதுக்கி விடும்படியும் நிதி அமைச்சர் ஜெட்லி கூறியதாக எதிர்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், பிரதமர் மோடியை சந்தித்து பேசியதை அடுத்து சமரசம் ஆனதாக கூறப்பட்டது. ஆனால், இதை ஜெட்லி மறுத்துள்ளார். பேட்டி ஒன்றில் கூறுகையில்,‘மக்களவை தேர்தலை ஒட்டி, மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து எந்த நிதியும் தேவையில்லை. ஆறு மாதங்களுக்கு நிதியை அரசு பெறாது. நாங்கள் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையை பாதுகாக்கவே விரும்புகிறோம். அதேசமயம், நிதி நிலை குறித்து அவ்வப்போது அரசு உஷார்படுத்தும்;  அதன் படி ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: