நடிகர் கமல்ஹாசன் இன்னும் குழந்தையாகவே உள்ளார் : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் இன்னும் குழந்தையாகவே உள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயல் தாக்கம் கடுமையாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு போர்க்காலஅடிப்படையில் நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறது. முதல் கட்டமாக ₹1000 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. பிரதமரை முதல்வர் சந்தித்த பின் உடனடியாக மத்திய குழு அனுப்பப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த குழுவினர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளனர்.மத்திய குழு பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி மதிப்பீடு செய்து அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசு கேட்ட நிதியை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்முடைய கோரிக்கை ₹15 ஆயிரம் கோடி. அதை மத்திய அரசு வழங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க முடியும்.

முதல்வர் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ததை, தூரத்து பார்வை என்று கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்னும் களத்தூர் கண்ணம்மா ஸ்டைலிலேயே இருக்கிறார். இன்னும் அவர் குழந்தையாகவே உள்ளார். அதேபோன்று முதல்வருக்கு முதுகெலும்பு இல்லை என்று வைகோ கூறியுள்ளார். அவர் எப்போது எலும்பு நிபுணர் ஆனார் என்று தெரியவில்லை. அதிமுகவில் உள்ள அனைவருக்கும் முதுகெலும்பு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: