தேர்தல் நெருங்கி விட்டதல்லவா... குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு சலுகை

மும்பை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து, அவற்றின் மூலம் வேலைவாயப்புகளை பெருக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு போதுமான நிதியை ஒதுக்கித்தர ரிசர்வ் வங்கி வரும் 19 ம் தேதி கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளது. கடந்த 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்தியில் உள்ள பாஜ அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல்,  திடீரென ேமற்கொண்டது. இதனால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்  பாதிக்கப்பட்டன. அடுத்து அதிரடியாக மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிமுறை காரணமாக மேலும் பல தொழில்கள் முடங்கின. பல மாநிலங்களில் குறு, சிறு தொழில்கள் 90 சதவீதம் அளவுக்கு முடங்கி விட்டன. நடுத்தர தொழில்கள் பெரும் இழப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு மீண்டும் சலுகை அளித்து வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்று பாஜ அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் வாக்குறுதியான வேலைவாய்ப்பு பெருக்குவது குறித்து பாஜ அரசு பெரிதாக அறிவித்தாலும் இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அடுத்த சில மாதங்களில் மக்களவை தேர்தல் வரும் நிலையில், வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்க பெரும் திட்டத்தை அரசு தீட்டியுள்ளது. கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் துறைமுகம் சார்ந்த பகுதிகளில்  வேலைவாயப்ப்பு மண்டலங்களை உருவாக்கி, அவற்றில், ஏற்றுமதி தொடர்பான பல குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்பு  அளிப்பது, அவற்றின் மூலம் வேலைவாய்ப்பை பெருக்குவது  என்பது தான் திட்டம்.

இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே நிதி ஆயோக் அமைப்பிடம் அமைச்சகம் பேசி உள்ளது. இதன்  தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி உரிய முடிவுகளை எடுக்க வரும் 19ம் தேதி கூடுகிறது.  வங்கி வாரிய இயக்குனர்கள் கூடி இதுதொடர்பாக சில  முடிவுகளை எடுக்க உள்ளனர். மத்திய அரசின் முடிவுகளுக்கு ஏற்ப குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க முக்கிய  முடிவுகள் எடுக்கப்படும்.

* ரிசர்வ் வங்கி போர்டு கூட்டத்தில் மேலும் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

* ரிசர்வ் வங்கி கையிருப்பு நிதி தொடர்பாகவும் முக்கிய  முடிவுகள் எடுக்கப்படும். உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்தலாம் என்று சமீபத்தில் சர்ச்சை கிளம்பியதை தொடர்ந்து இது தொடர்பாக போர்டு முடிவு எடுக்க உள்ளது.

* மேலும், நலிந்த வங்கிகள், சில துறைகள் சார்ந்த சிறு தொழில்களுக்கு கடன் அளிக்கலாம். அதன் மூலம் வங்கி வர்த்தகத்தை பெருக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

* பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டு தேவை ெதாடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: