கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெறும் : அமைச்சர் உதயகுமார்

சென்னை; நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெறும் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார். கடலுக்கு சென்றதால் மீனவர்களின் படகுகளுக்கு சேதம் ஏற்படவில்லை. கரையில் இருந்த படகுகள் தான் சேதமடைந்துள்ளன என கூறினார். தமிழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்றார். எதிர்கட்சிகளும் பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுள்ளதாக கூறினார். கஜா புயல் காரணமாக 216 குடிசைகள் சேதமாகியுள்ளதாகவும், 7 மாவட்டங்களில் 4,987மரங்கள் சாய்ந்துள்ளன. 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றார்.

புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சகஜ நிலை திரும்ப போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். 471 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 81 ஆயிரத்து 948 பேர் சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் கூறினார்.மேலும் பேசிய அமைச்சர் புயல் பாதிப்பு குறித்து முழுமையான அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி நிதியுதவி பெறப்படும் என்றார். புயல் பாதித்த பகுதிகளில் ஊடகங்கள் ஆற்றிய பணிக்கு நன்றி தெரிவித்த அவர், ஊடகங்களின் ஈடுபாடு பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: