அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது

சென்னை: கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான கஜா புயல்

வங்கக்கடலில் உருவான கற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறியது.இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பியது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசியது. மரங்கள் சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதிராம்பட்டினத்தில் கரையை கடந்தது கஜா புயல்!

நாகை அருகே அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டைக்கு மேற்கே திண்டுக்கல்லுக்கு கிழக்கே புயல் மையம் கொண்டுள்ளது.அதி தீவிர புயலாக இருந்த கஜா தீவிர புயலாக வலுவிழந்து திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. திண்டுக்கல்லில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. கஜா புயல் 11 மணிக்கு வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

கஜா புயலால் 6 மாவட்டங்களுக்கு சேதம் ஏற்படும் என எச்சரிக்கை

இதனிடையே கஜா புயலால் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால், மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் என்று மின்வாரிய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இதனிடையே அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கஜா புயலால் 6 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உள் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் தகவல் தொடர்பும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: