தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாகிறது

புதுடெல்லி: தங்க நகைகளுக்கு ஹால்மார்க் விரைவில் கட்டாயம் ஆக உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:  இந்திய தர நிர்ணய அமைவனம் 14 காரன், 18 காரட் மற்றும் 22 காரட் நகைகளுக்கு ஹால்மார்க் தரம் நிர்ணயம் செய்கிறது. இதை நாடு முழுவதும் கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.  நான்காவது தொழிற்புரட்சி ஸ்மார்ட் தொழில்நுட்பங்களாக இருக்கும். தர நிைலயை வரையறை செய்வது மிகவும் சவாலானதாக உள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: