2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கிய இரான் தங்க நாணய வர்த்தகருக்கு தூக்கு

தெஹ்ரான்: சுல்தான் ஆஃப் காயின்ஸ் என்றழைக்கப்பட்ட இரான் தங்க நாணய வர்த்தகர் ஒருவர் அதிக அளவு தங்க நாணயங்கள் பதுக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். வாஹித் மஸ்லாமியன் என்ற அந்த வணிகருக்கும், மற்றொரு நாணய வர்த்தகருக்கும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மஸ்லூமியனும், அவரது கூட்டாளிகளும் கிட்டதட்ட 2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்ததாக கூறப்பட்டுள்ளது.

இரான் நாணயத்தின் மதிப்பு சரிந்துவரும் நிலையில் அந்நாட்டில் தங்க நாணயங்கள் மற்றும் அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. அண்மையில் மீண்டும் இரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், இரான் ரியாலின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 70 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டது. நாட்டில் ஊழலுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டக்காரர்கள் போராடினர். நாட்டை கடுமையாக பாதிக்கும் பொருளாதார குற்றங்களை தடுக்கவும், சமாளிக்கவும் ஒரு முக்கிய முயற்சி தொடங்கப்பட்டது.

பொருளாதார குற்றங்களை விசாரிக்க இரானில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் இந்த ஆண்டு ஏழு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் சில விசாரணைகள் அரசுத் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: