வடகொரிய அதிபரை, அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க துணை அதிபர் தகவல்

சிங்கப்பூர்: உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரின் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது. சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் கூறியதாவது “இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. அடுத்த கட்டமாக சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்படும் என்றும் தெரிவித்தார். வட கொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை அமெரிக்கா ஏற்கும். வட கொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்றும் பணிகளை கிம் செய்ய வேண்டும். இருநாடுகளும் தங்கள் உறவை புதுப்பித்து, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டும் ஆகியவை அந்த ஒப்பந்தத்தின் சாராம்சமாக இருந்தது.

இந்நிலையில் வடகொரிய அதிபரை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அடுத்த ஆண்டில் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். டிரம்புடனான சந்திப்புக்குப் பின்னர், வடகொரியாவில் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்கின. ஆனால் 13 முதல் 20 வரையிலான ஏவுகணை தளங்களை வடகொரியா ரகசியமாக செயல்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, அடுத்த ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் கடந்த சந்திப்பின் போது வடகொரியா அளித்த பொய்யான வாக்குறுதிகளை ஏற்றதைப் போன்ற தவறு இந்த சந்திப்பின் போது நிகழாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: