அண்ணாமலை பல்கலையில் 25ம் தேதி பட்டமளிப்பு விழா

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் சிதம்பரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரும் 25ம் தேதி 82-வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைவரும் பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான நரசிம்மரெட்டி கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.  

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். பட்டமளிப்பு விழாவில் 69,269 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. பிஎச்டி ஆராய்ச்சி பட்டம், ரேங்க் மற்றும் மெடல் பெற்ற 322 பேருக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை நேரடியாக வழங்குகிறார். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மையம் அமைக்க ரூ.2 கோடியே 34 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம் உடனிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: