அருப்புக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த பெண் குழந்தைகள் மீட்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த இரண்டு பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் ஒன்றரை மற்றும் இரண்டரை வயதுள்ள குழந்தைகள் நேற்று மாலை ஆதரவின்றி சுற்றித்திரிந்தன. இதுகுறித்து வழக்கறிஞர்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள 1098 என்ற எண்ணிற்கு தகவல் அளித்தனர். விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அழகு, அருப்புக்கோட்டை ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வி ஆகியோர் நீதிமன்றம் வந்து ஆதரவின்றி குழந்தைகளை மீட்டனர்.  

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன. குழந்தைகளை விட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், அருப்புக்கோட்டையில் பெண் குழந்தைகளை அனாதையாக விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: