ரயில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை : சென்னை-சேலம் ரயில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் 14 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவல் முடிந்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த 2016ம் ஆண்டு சென்னை-சேலம் விரைவு ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்தி இன கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங், தினேஷ், ரோஹன் உள்பட 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்களில் 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. மேலும் கொள்ளை நடைபெற்ற பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டும் விசாரணை நடைபெற்றது. சேலத்தில் இருந்து ரயில் மூலம் பணம் எடுத்துச் செல்வது குறித்து, ஒரு மாதத்துக்கு முன்பே கொள்ளையர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னரே அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ரயில் பணம் வருவது குறித்து கொள்ளையர்களுக்கு யார் தகவல் அளித்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், 14 நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து 5 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: