கொடைக்கானல் அருகே விளைநிலங்களில் யானைகள் முகாம்

கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே விளைநிலங்களில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி அருகே புலியூர், வெங்களவயல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இரவு நேரங்களில் அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் இப்பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. பயிர்களை நாசப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. வீடுகளை விட்டு வெளியேற பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்படும் முன்பு அவற்றை நிரந்தரமாக காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: