நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை : மனோ கணேசன் திட்டவட்டம்

கொழும்பு : நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனாவின் அழைப்பை ஏற்று 6 எம்பிக்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசனும் 15 எம்பிக்களுடன் தேசிய தமிழ் கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனும் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது ராஜபக்சேவிற்கு ஆதரவு அளிக்குமாறு அதிபர் சிறிசேனா கேட்டு கொண்டார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மனோ கணேசன், ராஜபக்சேவிற்கு ஆதரவளிக்க போவதில்லை எனக் கூறி சிறிசேனாவின் கோரிக்கையை நிராகரித்தார்.மேலும் ராஜபக்ஷே அரசில் இணைய போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனிடையே இன்று மாலை நாடாளுமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் கரு. ஜெயசூர்யா அழைப்பு விடுத்துள்ளார்.

வருகிற 14ம் தேதி நாடாளுமன்றம் கூடும் பொழுது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை நவ.14ம் தேதிக்கு முன்பே கூட்ட வேண்டும் என்றும்  ராஜபக்சவுக்கு ஆதரவில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என்றும் எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைக்கு ஆலோசித்து முழு ஆதரவு தருவோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதிபர் சிறிசேனவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: