கர்நாடகா இடைத்தேர்தல் : பெல்லாரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

பெங்களூரு : கர்நாடக இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 மக்களவை மற்றும் ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 பேரவை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஷிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ராம்நகரம் தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்டனர்.

பெல்லாரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா முன்னிலை வகித்து வருகிறார். பாரதிய ஜனதா வேட்பாளர் சாந்தாவை விட உக்ரப்பா 17,480 வாக்கு அதிகம் பெற்றுள்ளார். ஜமகண்டி சட்டப்பேரவை தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த்  சித்து முன்னிலை வகித்து வருகிறார். ஷிவ்மோகா நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராகவேந்திரா முன்னிலை வகிக்கிறார்.

குமாரசாமி மனைவி அனிதா முன்னிலை

ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் குமாரசாமி மனைவி அனிதா முன்னிலை வகித்து வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: