நவ.14-ல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 16ல் கூடும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை கூட்ட அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதனால் நவ.14-ம் தேதி மகிந்த ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், ராஜபக்சேவுக்கு 95 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. ரணில் வசமுள்ள எம்.பி.க்களை இழுக்கும் வேலைகளும் ராஜபக்சே சார்பில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டணி, 6 உறுப்பினர்களை கொண்ட ஜே.வி.பி ஆகிய இரண்டும் ரணிலை ஆதரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மகிந்த ராஜபக்சே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: