நிர்மலாதேவிக்கு மரண பயத்தை ஏற்படுத்தி சிபிசிஐடி வாக்குமூலம்: உதவி பேராசிரியர் முருகன் குற்றச்சாட்டு

திருவில்லிபுத்தூர்: கல்லூரி  மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்  உள்ள  பேராசிரியை  நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர்   கருப்பசாமி ஆகியோர் திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி லியாகத் அலி, நிர்மலாதேவி  வழக்கில் 30 சாட்சிகளை மூடிய நீதிமன்றத்திலும், மற்ற சாட்சிகளை திறந்த நீதிமன்றத்திலும்   விசாரிக்கவும் நாளை மீண்டும் ஆஜராகவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சுமார் 145 சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளதாக ெதரிகிறது.விசாரணை முடிந்து வெளியே வந்த உதவி பேராசிரியர் முருகன், ‘‘ நிர்மலாதேவியை மிரட்டி,  அவருக்கு மரண பயத்தை ஏற்படுத்தி சிபிசிஐடி அதிகாரிகள் வாக்குமூலம்  வாங்கியுள்ளனர்.

எனக்கும், எனது குடும்பத்தினரின்  உயிருக்கும் ஆபத்து  உள்ளது. எனது குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பை  நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். ஜாமீன் கிடைத்து வெளியே வந்தவுடன் நிருபர்களை சந்திக்கிறேன்,’’ என்று தெரிவித்தார்.முருகன், கருப்பசாமி இருவரும் மூளை சலவை செய்து மாணவிகளை பாலியலுக்கு அழைக்கத் தூண்டியதாக நிர்மலா தேவி குறிப்பிட்டது குறித்து ஆராய்ச்சி மாணவர்  கருப்பசாமியிடம் கேட்டபோது, ‘‘மூளைச்சலவை  செய்யப்பட நிர்மலாதேவி என்ன குழந்தையா? 50  வயதானவர். அவருக்கு நல்லது, கெட்டது தெரியாதா?’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: