கல்வி, சுகாதாரத்தில் சிறந்த பங்களிப்பு இந்திய தம்பதிக்கு ஹுபிங்டன் விருது

ஹூஸ்டன்: உலகளவில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ராய்.எம்.ஹுபிங்டன் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு அமெரிக்காவின் ஹூஸ்டனில் வாழும் இந்திய வம்சாவளி தம்பதி மேரி-விஜய் கொராடியா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருது பெறும் விஜய் கொராடியா மும்பையைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவில் பிரபலமான பிரதாம் என்ற தன்னார்வை அமைப்பு மூலம் ஏழைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கிவருகிறார். இது தவிர சுகாதாரம், கல்வியறிவு ஆகிய துறையிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இவரது மனைவி மேரி, பாம்பே பல்கலையில் உயிர் வேதியியல் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். அவரும் இணைந்து சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக ஹுபிங்டன் விருது வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: