திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு சென்ற முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் சுசீந்திரம் வந்தது

சுசீந்திரம்: திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் 10 நாள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் கலந்து கொள்ள குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 6ம் தேதி தமிழக, கேரள போலீஸ் அணி வகுப்புடன் மேள, தாளம் முழங்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டது. 7ம் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்களும் திருவனந்தபுரம் கொண்டுசெல்லப்பட்டன.

திருவனந்தபுரத்தில் 10 நாள் நவராத்திரி திருவிழா முடிந்து சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டத்துக்கு திரும்பின. நேற்றுமுன்தினம் பத்மனாபபுரத்திற்கு வந்தன. வேளிமலைக்கு முருகன் சிலையும், தேவாரக்கட்டுக்கு சரஸ்வதி அம்மன் சிலையும் வந்தன. அங்கிருந்து புறப்பட்ட முன்னுதித்த நங்கை அம்மன் சிலை நேற்று காலை சுசீந்திரம் வந்தடைந்தது. சுசீந்திரத்தில் ரதவீதிகளை சுற்றி வந்த முன்னுதித்த நங்கை அம்மனுக்கு அதன்பின் ஆறாட்டு நடந்தது. பின்னர் கருவறைக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: