வடகிழக்கு பருவமழை எதிரொலி : கிருஷ்ணகிரி அணையில் 2,000 மணல் மூட்டைகள் தயார்

கிருஷ்ணகிரி: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், கிருஷ்ணகிரி அணையில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 அணைகள், ஏரிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தடுக்கும் வகையில், முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி அணையில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், மூட்டைகளில் மணல் நிரப்பும் பணிகள் நடந்தது. அதன்படி 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அணைக்கட்டுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி, மத்தூர், கெலமங்கலம் உட்பட 10 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: