திருச்சியில் சூரிய ஒளி மின்னாற்றல் பூங்கா அமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒப்புதல்

திருச்சி : திருச்சியில் இரண்டரை மெகாவாட் சூரிய ஒளி மின்னாற்றல் பூங்கா அமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் 18 திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டனர். பஞ்சப்பூரில் 15 ஏக்கரில் மின்னாற்றல் பூங்கா உள்ளிட்ட 18 திட்டங்கள் குறித்து முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன.  

இந்நிலையில் இந்தத் திட்டத்துக்கு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருச்சியில் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டரை மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின்னாற்றல் பூங்கா அமைய உள்ளது. ஒரு மாதக்காலத்துக்குள் இதற்கான டெண்டர் கோரப்படும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தொகுப்பில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: