திருச்சி அருகே மூடப்பட்ட ஆனந்தபுரம் ரயில்வே கேட்டை திறக்க தெற்கு ரயில்வே உத்தரவு

திருச்சி : திருச்சி லால்குடி அருகே புள்ளம்பாடியில் மூடப்பட்ட ஆனந்தபுரம் ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆள் உள்ள ரயில்வே கேட்டுகளில் 212 இடங்களில் தானியங்கி சிக்னல் உள்ளது. மேலும் 200 இடங்களில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தானியங்கி சிக்னல்கள் இல்லாத பகுதிகளில் சில இடங்களில் கேட்டுகளை திறந்து மூடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதேபோன்ற பிரச்னைக்கு உள்ளாகும் கேட்டுகளை மூட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி புள்ளம்பாடியில் ஆனந்தபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டது.

கடந்த 15ம் தேதிமுதல் ரயில்வே கேட் மூடப்பட்டால் பல கி.மீ. தொலைவுக்கு சுற்றி வரவேண்டிய நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த தினங்களுக்கு முன்பு ரயில்வே கேட் நீண்ட நேரமாக மூடப்பட்டிருந்ததால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், கேட் கீப்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தண்டவாளத்தில் அமர்ந்து 10 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் வரும் நேரம் தவிரமற்ற நேரங்களில் கேட்டை திறந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், ரயில்வே கேட்டை திறக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டதை தொடர்ந்து ஆனந்தபுரம் ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: