சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.82 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 25 காசுகள், டீசல் விலை 11 காசுகள் குறைந்துள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.