சபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர்கள் சார்பில் சீராய்வு மனு தாக்கல்

திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனால் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டது. நேற்று நிலக்கல்லில் பக்தர்கள் வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சி தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் நிலக்கல், இளவங்கல், பம்பை, ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கும் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. 144 தடை உத்தரவானது இன்று  காலை முதல் அக்.22ம் தேதி வரை அமலில் இருக்கும் என பத்தனம்திட்டா ஆட்சியர் நூகு  அறிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கேரள அனைத்து பிராமணர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில், சபரிமலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதாகவும், அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதேபோல் ஏற்கனவே தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: