பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிதி மோசடி ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கில் ரூ.300 கோடி பணப் பரிமாற்றம்: விசாரணை தீவிரம்

கராச்சி: பாகிஸ்தான் ஆட்டோ டிரைவர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.300 கோடிக்கு நடந்த பணப் பரிமாற்றம் குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பாகிஸ்தான் கராச்சி நகரில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் முகமது ரசீத். இவரது வங்கி கணக்கில் ரூ.300 கோடிக்கு மேல் பண பரிமாற்றம் நடந்தது. இதையடுத்து பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர்(எப்.ஐ.ஏ) முகமது ரசீத்துக்கு சம்மன் அனுப்பினர். அவரிடம் அவரது வங்கி கணக்கில் நடந்த பரிவர்த்தனை குறித்து கேட்டனர். இது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் கூறியதாவது: நான் கடந்த 2005ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றினேன்.

அப்போது வங்கியில் சம்பள கணக்கு தொடங்கினேன். ஒரு மாதத்தில் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறி, சொந்தமாக ஆட்டோ ஓட்டினேன். அந்த வங்கி கணக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் வாழ்க்கையில் ரூ.1 லட்சத்தை கூட நான் பார்த்ததில்லை. எனது வங்கி கணக்கை வேறு யாரோ தவறாக பயன்படுத்தி வருகின்றனர்’’ என்றார். பாகிஸ்தானில் நிதி மோசடி சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதில் சிக்குபவர்கள் பலரும் ஏழைகளாகவே உள்ளனர். நிதிமோசடியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் எப்.ஐ.ஏ இறங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: