நவ.27 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நாடாளுமன்ற தேர்தலில் அரசுக்கு எதிராக பிரசாரம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சேலம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் நவம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.  இதற்கான ஆயத்த மாநாடு, நேற்று சேலத்தில் நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம் மற்றும் மாயவன் ஆகியோர் நிருபர்களிடம்  கூறியதாவது:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. முதல்வரும் கோரிக்கைகள் குறித்து அழைத்து பேச மறுக்கிறார். மேலும், ஆசிரியர்களை பற்றி அநாகரீகமாக  பேசி வருகிறார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரச்னைகள் எதுவும் முதல்வருக்கு புரியவில்லை என்றால், அவரை சந்தித்து தெளிவுப்படுத்த தயாராக உள்ளோம்.

அதற்காகத்தான் ஆயத்த மாநில மாநாட்டை சேலத்தில்,  அவரின் வீட்டிற்கு அருகே நடத்துகிறோம். திட்டமிட்டபடி, நவம்பர் 27ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும்.சுமார் 7.50 லட்சம் பேர் பங்கேற்பதால், போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும். நீதிமன்றம் எந்தவித நடவடிக்கை எடுத்தாலும், அதனை சட்டரீதியாக அணுகுவோம். எனவே, தமிழக முதல்வர் நேரடியாக அழைத்துப் பேசி தீர்வு  காண வேண்டும். இல்லையெனில், வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது, அரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்வோம்.  அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பென்ஷன் தொகை ₹23,000 கோடி, தற்போது  எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை, அமைச்சர்கள் சுருட்டி விட்டனரா? என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: