ஆப்கன் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடித்து 14 பேர் பலி

குண்டுஸ்: ஆப்கானிஸ்தானில் வரும் 20ம் தேதி நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால் அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.  இந்நிலையில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தக்கர் மாகாணத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் நசிபா யூஸ்பிபெக் என்ற பெண் வேட்பாளர் ஒருவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்பொழுது, அங்கு நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், 14 பேர் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: