வெ.இ.க்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய அணியில் ரிஷப் பன்ட்: தினேஷ் கார்த்திக் நீக்கம்

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தினேஷ் கார்த்திக்கு  பதிலாக அறிமுக வீரராக ரிஷப் பன்ட் இடம் பெற்றுள்ளார். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் 2  போட்டிக்கான 14 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், ஆசிய கோப்பை தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கோஹ்லி மீண்டும்  கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.அறிமுக வீரராக இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனி  சமீபகாலமாக பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். எனவே உலக கோப்பைக்கு முன்பாக டோனியின் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் இடத்திற்கு மாற்று  வீரரை முடிவு செய்வதற்கான முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதனால், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் அனுபவ விக்கெட் கீப்பரான  தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டார்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவர் சோபிக்காததால் இம்முறை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பன்ட்  அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் இடம் பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர்  குமார், பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, கலீல் அகமது, சர்துல் தாகூர் ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.  ஜடேஜா, குல்தீப், சாஹல் ஆகிய சுழல்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் போட்டி கவுகாத்தியில் வரும் 21ம் தேதி நடக்கிறது. அணி விவரம்: கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், அம்பாதி ராயுடு, மணிஷ் பாண்டே, டோனி, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப்  யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது, சர்துல் தாகூர், கே.எல்.ராகுல்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: