டீசல் ரூ.78.26க்கு விற்பனை ; சென்னையில் பெட்ரோல் ரூ.86-ஐ நெருங்கியது

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை நேற்றும் அதிகரித்தது. சென்னையில் நேற்று பெட்ரோல் ₹85.99க்கும் டீசல் ₹78.26க்கும் விற்பனையானது. மும்பை பர்மனியில் ₹91.82க்கு விற்கப்பட்டது. மகாராஷ்டிராவின் 34 மாவட்டங்களில் பெட்ரோல் ₹90ஐ தாண்டிய நிலையில், சென்னையில் முதல் முறையாக ₹86ஐ நெருங்கியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திய வண்ணம் உள்ளன. சென்னையில் நேற்று பெட்ரோல் 12 காசு அதிகரித்து ₹85.99க்கும், டெல்லியில் ₹82.72, மும்பையில் ₹90.08க்கு விற்கப்பட்டது. டீசல் விலை சென்னையில் 6 காசு உயர்ந்து ₹78.26க்கும் டெல்லியில் ₹74.02 மும்பையில் ₹₹78.58ஆகவும் இருந்தது. மும்பையில் கடந்த 23ம் தேதியே பெட்ரோல் ₹90ஐ நெருங்கியிருந்தது.  

 பெட்ரோல் மற்றும் டீசல் மீது மகாராஷ்டிரா அரசு கூடுதல் வரி விதிப்பதாலேயே மற்ற மாநிலங்களை விட இங்கு பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. நெடுஞ்சாலைகளில் நடக்கும் வாகன விபத்துகளை தடுக்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இருக்கும் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மகாராஷ்டிராவின் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த பல மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீது மகாராஷ்டிரா அரசு கூடுதலாக ₹3 வரி வசூலித்து வருகிறது.

 இது தவிர வாட் வரி 26 சதவீதம் (மும்பையில் மட்டும் 25 சதவீதம்), வறட்சி நிவாரண வரி ₹3, ஸ்வட்ச் பாரத் வரி, கல்வி வரி மற்றும் விவசாயில் நிவாரண நிதிக்கான வரி தலா ₹1 என பெட்ரோல், டீசல் மீது மகாராஷ்டிரா அரசு மொத்தம் ₹39 வரி விதிக்கிறது. இதுதான் மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.  இதுபோல் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. டீசல் விலை ஏற்றம் காரணமாக சரக்கு போக்குவரத்து வாகனங்களின் கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரித்து விட்டது. இதன் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

34 மாவட்டத்தில் 90ஐ தாண்டியது

மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகப்பட்ச விலைக்கு விற்பனையாகிறது. மகாராஷ்டிராவின் 34 மாவட்டங்களில் நேற்று பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டியது. மும்பையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹90.08 ஆக இருந்தது. மும்பையில் நேற்று மும்பையில் பெட்ரோல் விலை ₹90.08 ஆகவும் டீசல் விலை ₹78.58 ஆகவும் இருந்தது, மும்பை புறநகர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை ₹90.15 ஆகவும், டீசல் விலை ₹78.65 ஆகவும் இருந்தது. மும்பை பெருநகர பிராந்தியத்துக்கு உட்பட்ட பால்கர், தானே மாவட்டங்களிலும் நேற்று பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டியிருந்தது.மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக பர்பனி மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் விலை ₹91.82 ஆகவும், டீசல் விலை ₹79.06 ஆகவும், நாண்டெட் மாவட்டத்தில் பெட்ரோல் விலை ₹91.65 ஆகவும், டீசல் விலை ₹78.91 ஆகவும் இருந்தது. மகாராஷ்டிராவில் மொத்தம் 36 மாவட்டங்கள் உள்ளன. இதில் 34 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டி விட்டது. குறைந்தபட்சமாக சாங்கிலி மாவட்டத்தில் ₹89.97க்கும், அகமத்நகர் மாவட்டத்தில் ₹89.95க்கும் பெட்ரோல் விலை நேற்று விற்பனையானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: