திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரத்தில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரத்தில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக உள்ளது. இதனையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் வழங்கக்கூடிய விஐபி தரிசனத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று, நாளை 28, 29 , 30 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 9 நாட்களிலும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், அரசாங்க ரீதியான பதவியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வந்தால் மட்டுமே விஐபி தரிசனம் செய்து வைக்கப்படும் என்றும், மற்ற எந்த வித சிபாரிசு கடிதங்களின் மூலம் விஐபி தரிசனம் வழங்க முடியாது என தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: