சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.4 சதவீதம் வட்டி உயர்வு: பிபிஎப்.புக்கு வட்டி 8 சதவீதமானது

புதுடெல்லி: தேசிய சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட  சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம்  உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி 2018-2019ம் நிதியாண்டில் மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலாண்டிற்கு மறுசீரமைக்கப்பட்ட வட்டி விகிதம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.  இதன்படி. 5 ஆண்டு டெபாசிட், தொடர் வைப்பு தொகை, மூத்த குடிமக்கள் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.8, 7.3 மற்றும் 8.7 சதவீதமாக உயர்த்தப்ப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சிறுசேமிப்பு வைப்பு தொகைக்கான வட்டி சதவீதம் 4 ஆகவே நீடிக்கிறது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), தேசிய சேமிப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கான ஆண்டு வட்டி விகிதம்  7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிசான் விகாஸ் பத்தரம் மீதான வட்டி 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது மற்றும் 118 மாதங்களுக்கு மாறாக 112 மாதங்களில் முதிர்ச்சி அடையும். பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்ய சம்ரித்தி வட்டி விகிதம் 0.4 உயர்ந்து 8.5 சதவீதமாக உள்ளது. ஒன்று முதல் மூன்று ஆண்டு வரையிலான சேமிப்பு டெபாசிட்டுக்களுக்கு 0.3சதவீதம் வட்டி உயர்ந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: