துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் காயம் காரணமாக 3 வீரர்கள் விலகியுள்ளனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் லீக் சுற்றில் பங்கேற்ற 2 போட்டிகளிலும் வென்று இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை சூப்பர் 4 சூற்று தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேல், சர்துல் தாகூர், பாண்டியா ஆகியோர் விலகியுள்ளனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தீபக் சகாரும், அக்சர் படேலுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், சர்துல் தாகூருக்கு பதிலாக சித்தார்த் கவுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.