பாலக்கோடு பகுதியில் விலை வீழ்ச்சி அடைந்ததால் தக்காளி சாலையோரம் வீச்சு

பாலக்கோடு,: பாலக்கோடு பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் தக்காளியை சாலையோரங்களில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சுற்றியுள்ள வெள்ளிச்சந்தை, மாரண்டஅள்ளி, மல்லுப்பட்டி, பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, சாமனுர், மல்லாபுரம், கும்மனூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 500ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். மழை பொய்த்து போனதால், கிணற்று பாசனத்திலும், விலைக்கு தண்ணீர் வாங்கியும் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் தக்காளி விளைச்சல் அதிமாக இருந்தும், இந்த மாதம் விஷேச நாட்கள் இல்லாததால் தக்காளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ₹250 முதல் ₹300 வரை விற்பனையானது. தற்போது விலை சரிந்ததால் ₹50 முதல் ₹60 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் தக்காளி மார்க்கெட்டில் பெருமளவு தக்காளி தேக்கமடைந்தது. இதையடுத்து தக்காளியை விவசாயிகள் சாலையோரங்களில் கொட்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உரிய விலை கிடைக்காததால், சிலர் தக்காளியை தோட்டங்களில் பறிக்காமல் விட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, தக்காளி சாறு பிழியும் தொழிற்சாலை அமைக்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: