சேலம்: சேலம் கண்ணங்குறிச்சியில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டெருமையை விரட்ட வனத்துறையினர் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். ஏற்காடு அடிவாரமான கண்ணங்குறிச்சி பகுதியில் அதிக அளவிலான விவசாய நிலங்கள் இருக்கின்றன. ஏற்காடு வனப்பகுதியிலிருந்து காட்டெருமை, மான், காட்டுப் பன்றி, முயல், கரடி உள்ளிட்ட விலங்குகள் மலை அடிவாரப் பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வருவது வழக்கம். இதனை தொடர்ந்து மூக்கனேரி பகுதியில் சுமார் 11 மணி அளவில் காட்டெருமை ஒன்று நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது.
