தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரம் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் டெல்லி முதல்வர் பெயர் சேர்ப்பு: குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை

புதுடெல்லி: டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு முதல்வர் கெஜ்ரவாலின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலர் அன்சு பிரகாசை  முதல்வர் முன்னிலையில் சக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அன்சு பிரகாஷ் டெல்லி போலீசில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை நேற்று கூடுதல் தலைமை மெட்ேராபாலிடன் மாஜிஸ்திரேட் சமர் விஷால் முன்பாக தாக்கல் செய்தனர். சுமார் 1,300 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையில், முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணைமுதல்வர் சிசோடியாவை குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர்.

இந்த இருவர் தவிர, ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்எல்ஏக்கள் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: