சொல்லிட்டாங்க...

ஆளுநர் மாளிகையின் புதிய அதிகார மையமாக உருவெடுத்துள்ள அதிகாரி போடும் ஆட்டங்களால் ஆளுநர் மாளிகை தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

அகில இந்திய அரசியலில் புகழ் பெற்றவரான கருணாநிதிக்கு, மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

ஆளுநர் மாளிகையில் நீதிபதிகளை அவமதிக்கின்ற வகையில் நடந்த செயலுக்கு ஆளுநர் மாளிகையின் அதிகாரப் பொறுப்பில் உள்ளோர்தான் பொறுப்பாளிகள்.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழகம் முழுவதும் எங்கள் கட்சியினர் மீது எடப்பாடி அரசு  அராஜக போக்கை ஏவுகிறது. இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்வோம்.

- அமமுக துணைபொது செயலாளர் டிடிவி.தினகரன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: