கட்டிட இடிப்பு கட்டணம், காலிமனை வரி செலுத்தாததால் சென்னை மாநகராட்சிக்கு 10 கோடி இழப்பு

சென்னை: தனியார் நிறுவனம் ஒன்று கட்டிட இடிப்பு கட்டணம், காலிமனை வரி செலுத்தாததால் சென்னை மாநகராட்சிக்கு 10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்களை கட்டுவதற்கு முன்பு மாநகராட்சியிடம் வரைபட அனுமதி பெற்று கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வரைபடத்தின்படி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். இதேபோல், கட்டிடத்தை இடிப்பதற்கும் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், கட்டிடங்கள் இடிப்பதற்கு உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்நிலையில், மாதவரம் மண்டலத்தில் அமைந்திருந்த தனியார் நிறுவனம் ஒன்று மாநகராட்சிக்கு கட்டிடம் இடிப்பதற்கான கட்டணம், காலிமனை வரி செலுத்தாததால் சென்னை மாநகராட்சிக்கு 99 கோடியே 9 லட்சத்து 74 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  

இதுகுறித்து இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனம் 8,45,500 சதுர மீட்டரில் இயங்கி வந்தது. சில நிர்வாக காரணங்களினால் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி முதல் மூடப்பட்டது. மாநகராட்சிக்கு கட்டிட இடிப்பு கட்டணம் செலுத்தாமலும் மாநகராட்சியின் அனுமதி பெறாமலும் கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டுவிட்டதால் ஒரு சதுரமீட்டருக்கு 110 வீதம் 8,45,500 சதுர மீட்டருக்கு 9 கோடியே 30 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இடிக்கப்பட்ட கட்டிடத்தின் பரப்பளவு விவரம் எந்த ஆவணங்களிலும் குறிப்பிடப்படவில்லை. இந்த தொழில் நிறுவனத்தின் மொத்த பரப்பளவில் பொது உபயோக பயன்பாட்டிற்கான இடம் 2,28,616 ச.மீ போக நிகர காலிமனையின் பரப்பளவு 66,37,671.84 சதுரடியாகும். ஒரு சதுர அடிக்கான காலிமனை வரி 0.15 வீதம் 66,37,671.84 சதுர காலி மனைக்கு ஒரு அரையாண்டுக்கு 9,98,651 வீதம் 2013-14 2ம் அரையாண்டு முதல் தணிக்கை நடைமுறை 2016-17 இரண்டாம் அரையாண்டு வரை 7 அரையாண்டுகளுக்கு 69,69,557 இந்நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படவில்லை. இது மாநகராட்சிக்கு ஏற்பட்ட இழப்பாகும். இதன் மூலம், மாநகராட்சிக்கு 9 கோடியே 99 லட்சத்து 74 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: