நாகமலை: விவசாயிகள் பயன்படுத்தும் மண்வெட்டி மருத்துவ குணமுடைய கை பிடியுடன் தயாரிக்கப்படுகிறது. மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களான வடிவேல்கரை, கீழக்குயில்குடி, புதுக்குளம், சம்பக்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு வாழை, நெல், காய்கறிகள் உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர்களை பயிரிட நிலத்தை தயார் படுத்தும் முக்கிய கருவி மண்வெட்டியாகும். வாய்க்கால் வெட்டுதல், வரப்பு வெட்டுதல், பயிர்செய்யும் நிலத்தை தயார் செய்வது, களை எடுத்தல் ஆகிய வேலைகளுக்கு மண் வெட்டி அவசியமானதாகும். மண்வெட்டி விவசாயிகளுக்கு வலது கை போன்றது.
அதிகம் பயன்படுத்துகூடிய மண்வெட்டியை யூக்லிப்டஸ், வேம்பு போன்ற மருத்துவ மூலிகை தாவரங்களில் இருந்து கைபிடி செய்யப்படுகிறது. இந்த மண்வெட்டிகளை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துவதால் கை, கால் தலைவலி போன்றவைகள் வராமல் இருக்கும். உடல்வலியும் வராது. இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த மண்வெட்டி செய்யும் காசிவிஸ்வநாதன் கூறுகையில், ` விவசாயிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் மண்வெட்டிகள் தயார் செய்கிறோம். விலை 250 ரூபாய். நாகமலையைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவாசாயிகள் அனைவரும் இங்கு தான் மண்வெட்டி வாங்கிச் செல்கின்றனர். தற்போது கோடை முடிந்து அடுத்த நெல் பயிர் செய்யும் பருவத்தில் அதிக மண்வெட்டிகள் விற்பனையாகும். அதற்காக தற்போதிலிருந்தே மண் வெட்டி தயார் செய்கிறோம்’ என்றார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!