சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலைக்காக அரசு அடக்குமுறையை கையாளுகிறது : முத்தரசன்

கோவை: சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலையால் 1,900 ஹெக்டேர் நிலம் பறிபோவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 159 கிராம விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நிலத்தை நம்பிதாக் விவசாயிகள் வாழ்கிறார்கள் என்றும், விவசாயிகள், மக்கள் கருத்தை கேட்காமல் நிலத்தை கையகபடுத்த முத்தரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல வீடுகள், வனம், தென்னை மரங்கள் அழிக்கப்படுவதாகவும், ஏற்கனவே சென்னை - சேலம் இடையே 3 பாதைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இருக்கின்ற சாலைகளை விரிவாக்கம் செய்யலாம் என்றும், கருத்து கூறியதற்காக சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 8 வழிச்சாலை குறித்து கருத்து கூறுபவர்கள் சமூக விரோதிகள் என்று அரசு கூறுகிறது என்று குற்றம் சாட்டிய முத்தரசன், 8 வழிசாலைக்காக அரசு அடக்குமுறையை கையாளுவதாக குற்றம் சாட்டினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: