பொய்யான புள்ளி விவரங்களை அளித்து மக்களை அதிமுக அரசு ஏமாற்றுகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: பொய்யான புள்ளி விவரங்களை அளித்து மக்களை அதிமுக அரசு ஏமாற்றுவதாக தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தி குறித்து தவறான புள்ளி விவரத்தை அளித்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 2013 - 14-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 53.49 லட்சம் டன் என அரிசி உற்பத்தி என ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது.

ஆனால் தமிழக அரசோ 2013-14-ம் ஆண்டில் 71.15 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்வதாக தவறான தகவலை அளித்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 2014-15-ம் ஆண்டில் தமிழகத்தின் அரிசி உற்பத்தி 57.27 லட்சம் டன் என்று ரிசர்வ் வங்கி அளித்துள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசோ 2014-15-ம் ஆண்டில் 79.49 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்வதாக தவறான தகவல்களை அளித்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக அரசு தரும் புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மை கேள்விகுரியதாகிவிட்டதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், சட்டமன்றம் தொடங்கி மக்கள் மன்றம் வரை சரியான தகவலை அரசு தருவதில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: