×

சூதாட்டத்தை தடுக்க பாக். வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதித்தது ஐசிசி

சூதாட்டம் நடைபெறுவதை தடுக்கும் விதமாக கிரிக்கெட் போட்டிகளின் போது ஸ்மார்ட் வாட்ச் அணியக் கூடாது என்று பாகிஸ்தான் வீரர்ரகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்துள்ளது. இங்கிலாந்து-பாகிஸ்தான் எதிரான டெஸ்ட் பேட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னில் சுருண்டது.  

முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் ஐ.சி.சி.யின் சூதாட்ட தடுப்பு குழுவினர் பாகிஸ்தான் வீரர்களை சந்தித்து பேசினர். போட்டியின் போது ஸ்மார்ட் வாட்சுகளை சில வீரர்கள் அணிந்திருப்பதாகவும், அந்த வாட்ச் ஒரு ஸ்மார்ட் போன் போல செயல்பட கூடியது என்பதால் அதை பயன்படுத்துவது ஐ.சி.சி.க்கு எதிரானது என்று அவர்கள் வீரர்களை எச்சரித்துள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...