டிவிட்டரில் பின் தொடர்பவர்களை சட்டப்படி முடக்க முடியாது : டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன்: டிவிட்டரில் தன்னை பின் தொடர்பவர்களை அதிபர் டிரம்ப் சட்டப்படி பிளாக் செய்ய முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அரசு நிர்வாகம் எடுக்கும் முக்கிய முடிவுகள், திட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியிலான தாக்குதலை சமூகவலை தளமான டிவிட்டர் மூலம் வெளியிடுகிறார். அவரை 5.2 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். டிரம்பை டிவிட்டரில் பின் தொடர்ந்த 7 பேருடன் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் தன்னை பின் தொடர்வதை தடுத்தார். இதை எதிர்த்து 7 பேரும் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் டிரம்பின் டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்த தங்களை சட்ட விரோதமாக டிவிட்டர் கணக்கில் இருந்து அதிபர் டிரம்ப் முடக்கியுள்ளார் எனவும், அரசு அதிகாரியான அமெரிக்க அதிபருடன் அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்தை பதிவிட்டதால் தங்கள் கணக்கை முடக்க முடியுமா? என நீதிபதிக்கு கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் நீதிபதி நாவோமி ரைஸ் பச்வால்டு நேற்று அளித்த தீர்ப்பில், ‘டிவிட்டர் பதிவில் அரசியல் ரீதியாக வேறுபட்ட கருத்தை பதிவிட்டதற்காக தன்னை பின்தொடர்பவர்களை டிரம்ப் சட்டப்படி தடுக்க (பிளாக்) முடியாது' என கூறியுள்ளார். நீதிபதியின் இந்த உத்தரவை மனுதாரார்கள் வரவேற்றுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: