×

பாகிஸ்தான் அபார பந்துவீச்சு 184 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்னில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அலஸ்டர் குக், ஸ்டோன்மேன் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பாகிஸ்தானின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். முகமது அப்பாஸ் வேகத்தில் ஸ்டோன்மேன் (4) ஸ்டம்புகள் சிதறி ஆட்டமிழந்தார். கேப்டன் ரூட் (4), மாலன் (6) ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை ஹசன் அலி வீழ்த்தினார். பயர்ஸ்டோ 27 ரன்னில் பஹீம் அஷ்ரப் பந்தில் கிளீன் போல்டானார்.  அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் நல்ல ஒத்துழைப்பு தர குக் அரைசதம் அடித்தார்.

பொறுப்புடன் ஆடிய குக் 70 ரன் சேர்த்த நிலையில் முகமது அமீர் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் சீட்டு கட்டுபோல் சரிந்தனர். ஸ்டோக்ஸ் (38), பீஸ் (5), பிராட் (0) ஆகியோர் முகமது அப்பாஸ் பந்திலும், பட்லர் (14), உட் (7) ஆகியோர் முகமது ஹசன் பந்திலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, முகமது அப்பாஸ் தலா 4 விக்கெட், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்ததாக பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...