×

சில்லி பாயின்ட்

* ஒலிம்பிக்சில் பதக்கம் வெல்வதை இலக்காக கொண்டு முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தேர்வு செய்து சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான 41 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட 8 வீரர், வீராங்கனைகள் நீக்கப்பட்டுள்ளனர். சானியா தற்போது கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
* பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இறுதிப் போட்டியில் அவர் சுவீடனின் எலியஸ் யமீரை வீழ்த்தும் பட்சத்தில் பிரதான சுற்றுக்கு முன்னேறலாம். முன்னதாக, தரவரிசையில் டாப்-100க்குள் இடம் பிடித்ததன் மூலம் இந்தியாவின் யுகி பாம்ப்ரி நேரடியாக பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
* மகளிர் ஐபிஎல் டி20 தொடரை நடத்துவதற்கு முன்னோட்டமாக மகளிர் டி20 சேலஞ்ச் காட்சி போட்டி சமீபத்தில் மும்பையில் நடத்தப்பட்டது. போட்டியை காண போதிய அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வராததால், அடுத்த ஆண்டில் மினி ஐபிஎல், அதாவது 3 அல்லது 4 மகளிர் அணிகளை கொண்டு தொடரை ஆரம்பிப்பது தொடர்பாக பிசிசிஐ தற்போது ஆலோசித்து வருகிறது.
* பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 12 மாத தடைவிதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி கேன்டைஸ் வார்னர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘தென் ஆப்ரிக்க தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் போது நான் கர்ப்பமாக இருந்தேன். அந்த பயணத்தில் என் கணவருக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் எனக்கு கருச்சிதைவும் ஏற்பட்டது. 3வது குழந்தையை எதிர்நோக்கி ஆவலுடன் இருந்த நாங்கள் மிகவும் துக்கமடைந்தோம்’’ என கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...