கடந்த ஆண்டில் சோதனை செய்யப்பட்ட அதிவேக கார்கள்

கூப்பர் எஸ்இ: மினி நிறுவனத்தின் முதலாவது எலக்ட்ரிக் கார், இந்த ஆண்டில் சோதனை செய்யப்பட்ட 5வது அதிவேக காராகும். கூப்பர் எஸ்இ என்ற இந்த கார், 7.13 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டியுள்ளது. முன்கூட்டியே இந்த காருக்கு பதிவு செய்தவர்களில், முதல் கட்டமாக சில கார்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டன.மினி கூப்பர் ஜெசிடபிள்யூ: கூப்பர் நிறுவனத்தின் ஜான் கூப்பர் ஒர்க் கார் சோதனை செய்யப்பட்டது. இந்த கார், பூஜ்யத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை 6.19 நொடிகளில் எட்டியுள்ளது.ஆடி ஏ8 எல்: ஆடி நிறுவனத்தின் ஏ8 எல் கார், 3 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜின் கொண்டது. அதிகபட்சமாக 340 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் கொண்டது. சோதனையில் இந்த கார் பூஜ்யத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை 6.05 நொடிகளில் எட்டியுள்ளது.மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ 45எஸ்: மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஏ 45எஸ் கார், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்டது.இந்தக் கார் அதிகபட்சமாக 421 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சோதனையின்போது இந்த கார்  100 கி.மீ வேகத்தை 4.08 நொடிகளில் எட்டியுள்ளது.மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ 63 எஸ்: மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி இ63 எஸ் காரில் 4.0 லிட்டர் டிவின் டர்போ விஎஸ் இன்ஜின் உள்ளது. அதிகபட்சமாக 612 பிஎஸ் பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சோதனையின்போது இந்த கார்  100 கி.மீ வேகத்தை 3.61 நொடிகளிலேயே எட்டியுள்ளது….

The post கடந்த ஆண்டில் சோதனை செய்யப்பட்ட அதிவேக கார்கள் appeared first on Dinakaran.

Related Stories: