திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக நடந்தது

பாலக்காடு: கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள பாரமேற்காவு மற்றும் திருவம்பாடி ஆகிய இரு கோயில்களில் திருச்சூர் பூரம் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 19ம் தேதி தொடங்கியது. 24ம் தேதி யானைகளின் அலங்கார அணிகலன்களின் கண்காட்சி நடந்தது.  நேற்று திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, வடக்குநாதர் கோயில் வளாகத்தில் இலஞ்சித்தரை மேளம் (செண்டைவாத்யம்) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பாரமேற்காவு, திருவம்பாடி கோயில்களின் யானைகள் அணிவகுத்து வடக்குநாதர் தெற்குகோபுரநடை தேக்கின்காடு மைதானத்தில் வண்ணக்குடைமாற்றம் நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்தது. இந்நிகழ்ச்சியை வெளிநாட்டினர் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Related Stories: